விஜயகாந்த் தற்போது கட்சிப்பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஓய்வில் இருப்பதாக பிரேமலதா கூறினார்.
இந்நிலையில், நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நடிக்க இருப்பதாக வந்த தகவல் தவறானது என பிரேமலதா கூறியுள்ளார்.
விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக வந்த செய்தியை பார்த்து வியந்தேன். தவறான செய்தி அது. விஜயகாந்த் தற்போது கட்சிப்பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஓய்வில் இருக்கிறார்.
ஒருவேளை விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் கட்சியின் தலைமைக்குழு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.