சினிமா செய்திகள்
ரஜினி

ரசிகரின் மகளுக்கு ஆறுதல் கூறிய ரஜினி... வைரலாகும் வீடியோ

Published On 2021-12-18 15:41 IST   |   Update On 2021-12-18 15:41:00 IST
உச்ச நடிகராக இருக்கும் ரஜினி, தனது ரசிகரின் மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து அவருக்கு ஆறுதல் கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'அண்ணாத்த'. இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அண்மையில் இயக்குனர் சிவா வீட்டிற்கே சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ரஜினி, அவருக்கு தங்க செயின் பரிசாக அளித்தார். 

மேலும் கடந்த 12 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களும் இணைத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ரசிகரின் மகள் சௌமியா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதை அறிந்த ரஜினி, அவரை காணொளி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். கண்ணா பயப்படாத, தைரியமா இரு. கொரோனாவால என்னால நேர்ல வர்ற முடியல என ஆறுதலாக பேசியுள்ளார் ரஜினி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Similar News