கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி ‘விக்ரம்’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கமல் பிறந்தநாளில் விக்ரம் படத்தின் புதிய அறிவிப்பு
பதிவு: அக்டோபர் 21, 2021 15:41 IST
கமல்
கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வரும் நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அன்றைய தினத்தில் ’விக்ரம்’ படத்தின் முன்னோட்ட வீடியோ எனப்படும் கிளிம்ப்ஸ் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வருட கமல் பிறந்தநாளின் போது ‘விக்ரம்’ படத்தின் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :