சினிமா
விஜய்

உள்ளாட்சி தேர்தல் - விஜய் மக்கள் இயக்கத்தினர் 77 இடங்களில் வெற்றி

Published On 2021-10-13 03:00 GMT   |   Update On 2021-10-13 03:00 GMT
விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 77 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதன்படி காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 74 மையங்களில் நடைபெற்றது. 



ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டனர். இதில் 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 77 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பிரபு என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News