சினிமா
சமந்தா

விவாகரத்து சர்ச்சை - நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு

Published On 2021-09-27 14:26 IST   |   Update On 2021-09-27 20:39:00 IST
நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் அவர்கள் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து இருவரும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. 

சமீபத்தில் நடந்த நாகார்ஜுனா பிறந்த நாள் நிகழ்ச்சியில், சமந்தா பங்கேற்கவில்லை. அதேபோல் அமீர்கானுக்கு நாகார்ஜுனா குடும்பத்தினர் வீட்டில் விருந்து அளித்தனர். இதில் நாகார்ஜுனா, நாக சைதன்யா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் சமந்தா மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதன்மூலம் இருவரும் விவாகரத்து செய்து பிரியப்போவது உறுதி என டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.



இந்நிலையில், நடிகை சமந்தா தன்னை பற்றி தேவையில்லாத வதந்திகளும், அவதூறு செய்திகளும் வெளியாவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Similar News