சினிமா
ஆறாம் நிலம் படத்தின் போஸ்டர்

ஈழத் தமிழர்கள் சந்தித்த துயரங்கள் பற்றி பேசும் ‘ஆறாம் நிலம்’

Published On 2021-09-24 17:17 IST   |   Update On 2021-09-24 17:17:00 IST
ஆனந்த ரமணன் இயக்கத்தில் நவயுகா, சிறுமி அன்பரசி, மன்மதன் பாஸ்கி நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘ஆறாம் நிலம்’.
இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ஆறாம் நிலம். ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும், துயரங்களையும் மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நவயுகா, சிறுமி அன்பரசி, நடிகர் மன்மதன் பாஸ்கி ஆகியோர் நடித்துள்ளனர்.

சிவ சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சிந்தகா ஜெயக்கொடி இசையமைத்துள்ளார். சஜீத் ஜெயக்குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தை நேரடியாக யூடியூபில் வெளியிட்டு உள்ளனர். ஈழத் தமிழர்கள் சந்தித்த இன்னல்களை, ஒரு டாக்குமெண்டரி படமாக இயக்குனர் ஆனந்த ரமணன் எடுத்துள்ளார்.

Similar News