சினிமா
கீர்த்தி சுரேஷ்

‘அண்ணாத்த’-யை தொடர்ந்து ‘சாணிக்காயிதம்’ படத்திலும் கீர்த்தி சுரேஷுக்கு அந்த மாதிரி வேடம் தானாம்

Published On 2021-09-22 07:44 IST   |   Update On 2021-09-22 07:44:00 IST
அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள ‘சாணிக்காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து படக்குழுவினர்களே வியப்படைந்ததாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இதுவரை பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தொடர்ச்சியாக தங்கை வேடங்களில் நடித்து வருகிறார். அதன்படி சிவா இயக்கத்தில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்துள்ள அவர், அடுத்ததாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘போலா ஷங்கர்’ சிரஞ்சீவியின் தங்கையாகவும் நடித்து வருகிறார்.

இதில் இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்திலும், நடிகை கீர்த்தி சுரேஷ், செல்வராகவனின் தங்கையாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


சாணிக்காயிதம் படத்தின் போஸ்டர்

மேலும் இந்த படத்தில் 4 நிமிடம் சென்டிமெண்ட் காட்சி ஒன்று இருப்பதாகவும், அந்தக் காட்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் கிளிசரின் இல்லாமலேயே கண்களில் கண்ணீரை வரவழைத்து நடித்ததாகவும், அதைப் பார்த்து படக்குழுவினர்களே வியப்படைந்ததாகவும் கூறப்படுகிறது.

Similar News