சினிமா
கருங்காப்பியம் படத்தில் நடிக்கும் நடிகைகள்

முன்னணி நடிகைகள் ஒன்று கூடிய கருங்காப்பியம்

Published On 2021-07-16 19:49 IST   |   Update On 2021-07-19 09:32:00 IST
முன்னணி நடிகைகளான ஐந்து பேர், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் 'கருங்காப்பியம்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.
'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'கருங்காப்பியம்'. இந்த படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, 'லொள்ளு சபா' மனோகர், விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் 'கருங்காப்பியம்' படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் (PAVE) என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ.பி.இன்டர்நேஷனல் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. 


கருங்காப்பியம்

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 'கருங்காப்பியம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Similar News