சினிமா
மண்டேலா படக்குழுவினருடன் யோகிபாபு

செஞ்சுரி போட்ட ‘மண்டேலா’ திரைப்படம் - கேக் வெட்டி கொண்டாடிய யோகிபாபு

Published On 2021-07-14 12:36 IST   |   Update On 2021-07-14 12:36:00 IST
தனிநபரின் வாக்குக்கு எவ்வளவு மதிப்பு உண்டு என்பதை அரசியல் நையாண்டியுடன் ‘மண்டேலா’ படத்தில் சொல்லி இருந்தார்கள்.
மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மண்டேலா’. இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

தனிநபரின் வாக்குக்கு எவ்வளவு மதிப்பு உண்டு என்பதை அரசியல் நையாண்டியுடன் படத்தில் சொல்லி இருந்தார்கள். அதுமட்டுமின்றி, சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் இந்தப் படம் வெளியானதால் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினரை வாழ்த்தி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்கள்.


மண்டேலா படக்குழு

இந்நிலையில், மண்டேலா படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது. இதில் யோகி பாபு, நடிகை ஷீலா, இயக்குனர் மடோன் அஷ்வின் உள்பட படத்தில் பணியாற்றியவர்கள் கலந்து கொண்டனர். இந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, நன்றி தெரிவித்துள்ளார் யோகிபாபு.


Similar News