சினிமா
விஜய், கவின்

பீஸ்ட் ஷூட்டிங்கின் போது பிக்பாஸ் கவினை பாராட்டிய விஜய்

Published On 2021-07-06 13:39 IST   |   Update On 2021-07-06 14:11:00 IST
நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் கவின், பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களைப் பெற்ற அவர், தற்போது இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். நெல்சன் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். 


கவின்

இந்த படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் கவின், பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, பீஸ்ட் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து நடிகர் விஜய், செட்டில் இருப்பவர்கள் அனைவரிடமும் இயல்பாக பழகியதாக கூறியுள்ள கவின், மேலும் தனது நடிப்பில் வெளியான ‘அஸ்க் மாரோ’ என்கிற ஆல்பம் பாடலை பார்த்து ‘செம்மையா இருந்தது’ என விஜய் பாராட்டியதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  

Similar News