சினிமா
சனம் ஷெட்டி

ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த மர்ம நபர் - சைபர் கிரைமில் நடிகை சனம் ஷெட்டி புகார்

Published On 2021-07-04 11:41 IST   |   Update On 2021-07-04 11:41:00 IST
நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.



இந்நிலையில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டி திருவான்மியூர் காவல் நிலையத்தில், ‘தனக்கு வந்த ஆபாச மெசேஜ் அடங்கிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார். அதன்பேரில் ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News