சினிமா
ஆர்.கே.சுரேஷ்

பொய்யான புகார்... என் மீது தவறு இல்லை - ஆர்.கே.சுரேஷ் விளக்கம்

Published On 2021-07-02 21:38 IST   |   Update On 2021-07-02 21:38:00 IST
கடன் வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாயை தான் ஏமாற்றிவிட்டதாக கொடுப்பட்ட புகாருக்கு நடிகர் ஆர்.கே.சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தன் வீட்டை விற்பதற்காகக் கடன் வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார் என்று வீணா என்பவர் சில நாட்களுக்கு முன்பு காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இது சம்பந்தமாக விளக்கம் அளிப்பதற்கும் தன் தரப்பு ஆவணங்களைக் கொடுப்பதற்கும் ஆர்.கே.சுரேஷ் இன்று காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

தன் தரப்பு ஆவணங்களையும் ஆதாரங்களையும் ஆணையாளர் வசம் கொடுத்து விட்டு வெளியே வந்தவர், ஊடகங்களைச் சந்தித்தார் அப்போது அவர் பேசியபோது,



"நான் எந்த மோசடியும் செய்யவில்லை. என்மீது என் தரப்பில் எந்தத் தவறும் இல்லை. அது முழுக்க ஜோடிக்கப்பட்ட பொய்யான புகார்" என்றார்.

Similar News