சினிமா
ரகுல் பிரீத் சிங்

ஓ.டி.டி. தளங்களால் அதிக வாய்ப்புகள் வருகிறது -நடிகை ரகுல் பிரீத் சிங் சொல்கிறார்

Published On 2021-07-02 10:11 IST   |   Update On 2021-07-02 10:11:00 IST
சினிமாவோடு ஓ.டி.டி. தளமும் படிப்படியாக முன்னேறினால்தான் சினிமா துறை சிறப்பாக இருக்கும் என நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: “ஓ.டி.டி. தளத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதன் மூலம் நடிகர் - நடிகைகள், இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. கொரோனா காலத்தில் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பது இயலாத காரியம். 

இதனால் ரசிகர்கள் பார்வை ஓ.டி.டி. பக்கம் திரும்பி இருக்கிறது. இதன் மூலம் படங்களை உலக அளவில் ரசிகர்கள் எல்லோரும் பார்க்கிறார்கள். நல்ல கதையம்சம் இருந்தால் அதை பாராட்டவும் செய்கிறார்கள். பெரிய திரையில் படங்களை பார்த்து சந்தோஷப்படும் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அதேபோல் இப்போது ஓ.டி.டி.யில் வரும் படங்களை விரும்பும் ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள். 



பொழுது போக்கு தளங்கள் எத்தனை இருந்தாலும் தியேட்டரில் பெரிய திரையில் படம் பாக்கும் மேஜிக் மட்டும் அப்படியேதான் இருக்கும். ஆனால் சினிமாவோடு ஓ.டி.டி. தளமும் படிப்படியாக முன்னேறினால்தான் சினிமா துறை சிறப்பாக இருக்கும். ஓ.டி.டி. தளங்களை நான் ஆதரிக்கிறேன்.’’ இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.

Similar News