சினிமா
ஜெரார்டு பெலிக்ஸ் திருமண வரவேற்பில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்

‘ஸ்டாலின் தான் வாராரு’ பாடல் மூலம் பிரபலமான இசையமைப்பாளருக்கு திருமணம் - முதல்வர் நேரில் வாழ்த்து

Published On 2021-07-02 09:25 IST   |   Update On 2021-07-02 09:25:00 IST
இசையமைப்பாளர் ஜெரார்டு பெலிக்ஸ் - பிரேஷி சாந்தனா தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ‘ஸ்டாலின் தான் வாராரு.... விடியல் தரப் போறாரு’ என்ற திமுகவின் தேர்தல் பிரச்சார பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. இளம் இசையமைப்பாளர் ஜெரார்டு பெலிக்ஸ் இசையமைத்திருந்த இந்தப் பாடல், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இந்தப் பாடலை பாடியிருந்தார். 


மணமக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பசுமைகூடை வழங்கியபோது எடுத்த புகைப்படம்

இந்நிலையில், இசையமைப்பாளர் ஜெரார்டு பெலிக்ஸ் - பிரேஷி சாந்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு, மரக்கன்றுகள் அடங்கிய பசுமைக்கூடையை வழங்கி மணமக்களை வாழ்த்தினர்.

Similar News