சினிமா
கோவில் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்திய அர்ஜுன்
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன், தன்னுடைய சொந்த செலவில் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். இவருடைய நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கதாநாயகன், வில்லன், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அர்ஜுன். இவர் தனது சொந்த செலவில் கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கட்டிவந்தார்.
இன்று அந்த ஆஞ்சநேயர் கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்த அவர், தனது யூடியூப் சேனல் மூலம் நேரடி ஒளிப்பரப்பையும் செய்தார். தற்போது கும்பாபிஷேகம் நடந்தபின்பு தன் குடும்பத்தாரும் அர்ஜுன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.