சினிமா
மந்திரா பேடி, ராஜ் கவுஷல்

பாலிவுட் நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம் - திரையுலகினர் இரங்கல்

Published On 2021-06-30 10:51 IST   |   Update On 2021-06-30 10:51:00 IST
மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் பலரும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தி நடிகை மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் இன்று காலமானார். பாலிவுட்டில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம்வந்த இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்கு வயது 49. இவர் பியார் மெயின் கபி கபி, ஷாதி கா லட்டு, அந்தோனி கவுன் ஹே போன்ற படங்களை இயக்கி உள்ளார்.  

இயக்குனர் ராஜ் கவுஷலின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  மந்திரா பேடி - ராஜ் கவுஷல் தம்பதிக்கு வீர் என்ற மகனும், தாரா என்ற மகளும் உள்ளனர்.

Similar News