சினிமா
கரீனா கபூர்

சீதையாக நடிக்க நடிகை கரீனாவுக்கு எதிர்ப்பு

Published On 2021-06-15 10:58 IST   |   Update On 2021-06-15 17:12:00 IST
கரீனாவுக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் கங்கனா அல்லது யாமி கவுதமை நடிக்க வைக்குமாறு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ராமாயண கதையை 3டி தொழில் நுட்பத்தில் சினிமா படமாக எடுக்கின்றனர். சீதை பார்வையில் கதை நகர்வதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். இந்த படத்தில் சீதை வேடத்துக்கு பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சீதையாக நடிக்க அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. கரீனா கபூர் கேட்ட தொகையை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்வதா? அல்லது வேறு நடிகையை பார்ப்பதா? என்ற யோசனையில் படக்குழுவினர் உள்ளனர். 

இந்த நிலையில், சீதை வேடத்தில் கரீனா கபூர் நடிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சீதையாக நடிக்க கரீனா கபூருக்கு அருகதை இல்லை என்றும் அவரை புறக்கணிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


கரீனா கபூர்

மேலும் இந்து கடவுளை கவுரவிக்காத கரீனாவை சீதையாக நடிக்கவிடக் கூடாது. கரீனா தனது வாழ்க்கையில் ராமாயணத்தை படித்தே இருக்க மாட்டார் என்றெல்லாம் பதிவுகள் வெளியிட்டு கோபத்தை வெளிப்படுத்தி வரும் ரசிகர்கள், அந்த கதாபாத்திரத்தில் கங்கனா அல்லது யாமி கவுதமை நடிக்க வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News