சினிமா
சுஷாந்த் சிங்

ஓராண்டாகியும் விலகாத மர்மம்.... டுவிட்டரில் ‘மிஸ் யூ சுஷாந்த்’ என உருகும் ரசிகர்கள்

Published On 2021-06-14 08:41 IST   |   Update On 2021-06-14 08:41:00 IST
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டு இன்றுடன் ஓராண்டாவதால் அவர் குறித்து ரசிகர்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையான ‘எம்.எஸ்.தோனி: தி அன்ட்டோல்டு ஸ்டோரி’ படத்தில் தோனியாக நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங். இவர் கடந்த வருடம் ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை உலுக்கியது. 

வாரிசு நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் அளித்து தன்னை ஒதுக்கியதால் மன அழுத்தத்தில் அவர் உயிரை மாய்த்ததாக கூறப்பட்டது. சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சல்மான்கான், இயக்குனர் கரன் ஜோகர், தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உள்ளிட்டோர் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.


டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மும்பை காவல்துறை, பீகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன. இருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற மர்மத்திற்கு இதுவரை அவர்களால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டு இன்றுடன் ஓராண்டாகிறது. இதையொட்டி #SushantSinghRajput என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டாக்கி வரும் ரசிகர்கள், அவர் குறித்து உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Similar News