சினிமா
ராஷி கண்ணா

கோலிவுட் முதல் பாலிவுட் வரை குவியும் பட வாய்ப்பு.... பிசியான ராஷி கண்ணா

Published On 2021-06-14 07:38 IST   |   Update On 2021-06-14 07:38:00 IST
நடிகை ராஷி கண்ணா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தற்போது நடிகை ராஷி கண்ணா, கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் இவர் கைவசம், அரண்மனை 3, துக்ளக் தர்பார், மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார் போன்ற படங்கள் உள்ளன. அதேபோல் தெலுங்கில் பக்கா கமர்ஷியல், தேங்க் யூ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 


ராஷி கண்ணா

இதுதவிர மலையாளத்தில் பிரம்மம், இந்தியில் 2 வெப் தொடர்கள், 2 படங்கள் என படு பிசியாக நடித்து வருகிறாராம். பட வாய்ப்பு குவிவதால், நடிகை ராஷி கண்ணா சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.   

Similar News