சினிமா
கமல்ஹாசன், கிரேஸி மோகன்

நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர் கிரேஸி மோகன் - கமல் உருக்கம்

Published On 2021-06-10 14:20 IST   |   Update On 2021-06-10 14:20:00 IST
கிரேஸி மோகனின் நினைவு தினமான இன்று, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.
நாடக கலைஞர், வசனம் மற்றும் திரைக்கதை ஆசிரியர், நடிகர், ஓவியர், கவிஞர் எனப் பல பரிமாணங்களில் மக்களை மகிழ்வித்த கிரேஸி மோகன், கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 10-ந்தேதி காலமானார். கிரேஸி மோகனின் நினைவு தினமான இன்று, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “நாடகமே உலகம் என்கிற ஞானச்சொல்லை, நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர். சிரிப்பு முகமூடிக்குள் தீவிர மரபிலக்கிய முகத்தோடு வானம் போல் வாழ்ந்து மறைந்தவர் கிரேஸி மோகன். இரண்டாம் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன்”. என பதிவிட்டுள்ள கமல், அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


கமல்ஹாசன் டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படம்

கமலின் ‘சதி லீலாவதி’, ‘காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘அபூர்வ சகோதர்கள்’, ‘இந்தியன்’, ‘அவ்வை சண்முகி’,  ‘தெனாலி’, ‘பஞ்ச தந்திரம்’ உள்ளிட்ட படங்களில் கிரேஸி மோகன் வசனகர்த்தாவாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News