சினிமா
ராணா, ஆதிவாசி மக்கள்

400 ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ராணா

Published On 2021-06-10 11:50 IST   |   Update On 2021-06-10 11:50:00 IST
நடிகர் ராணா 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான மளிகை, உணவுப் பொருள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா. இவர் நடிப்பில் தற்போது விராட பருவம் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் ராணா வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தை கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

விராட பருவம் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் எனும் மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பின்போது, அந்த பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களுடன் நெருங்கி பழகிய நடிகர் ராணா, தற்போது கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார்.


நடிகர் ராணா வழங்கிய நிவாரண பொருட்கள் ஆதிவாசி மக்களுக்கு வழங்கப்பட்டபோது எடுத்த படம்

அங்கு வசிக்கும்  400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான மளிகை, உணவுப் பொருள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். நடிகர் ராணாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Similar News