சினிமா
சிவகார்த்திகேயன்

வீட்டிலேயே இருங்கள்... கொரோனா பரவல் முடிவுக்கு வந்துவிடும் - ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் அட்வைஸ்

Published On 2021-05-31 11:52 IST   |   Update On 2021-05-31 11:52:00 IST
சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு ரசிகர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படி நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: “என்னுடைய ரசிகர்களான தம்பி, தங்கைகள் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் பத்திரமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து மிகவும் அவசியம் என்றால்தான் நீங்கள் வெளியே போக வேண்டும். எப்போதும் முககவசம் அணிந்து கொள்ளுங்கள். 

இரட்டை முககவசம் போடச் சொல்கிறார்கள். அதையும் அணியுங்கள். முககவசத்தை சரியாக அணிந்து கொரோனாவிலிருந்து தப்பியவர்களை பார்த்திருக்கிறேன். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நான் போட்டுக்கொண்டேன். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.


சிவகார்த்திகேயன்

அவர்களையும் வெளியே போகவிடாமல் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான வேலை இருந்தால், அதற்கு மட்டும் வெளியே சென்றுவிட்டு, உடனே வீட்டிற்கு வந்து விடுங்கள் மிகவும் பத்திரமாக இருந்தால் கொரோனா சீக்கிரமாக முடிந்துவிடும். அவர்களுடைய வேலையை பார்க்க தொடங்கிவிடலாம். எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். 

உடம்பை கவனித்து கொள்ளுங்கள். கொரோனா பாதிப்பு அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது என்று கேள்விப்படுகிறேன். நீங்கள் பத்திரமாக இருந்தீர்கள் என்றாலே, இது பெரிய பிரச்சினையே இல்லை. சீக்கிரமே அனைத்தும் சரியாகிவிடும்”. இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Similar News