சினிமா
ஆண்ட்ரியா

ஆண்ட்ரியாவின் முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்

Update: 2021-05-28 13:09 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

நடிப்பை தாண்டி சமூக நலனிலும் அக்கறை கொண்டவர். பல்வேறு சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமூக பிரச்சினைகளுக்காக பலமுறை கேள்வி எழுப்பியுள்ளார். கொரானா பாதிக்கப்பட்ட இவர், வீட்டு தனிமையில் இருந்து சமீபத்தில்தான் குணமடைந்தார். தற்போது அரசு சார்பில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் பயனுள்ள பணிகளை செய்து வருகிறார்.அந்த வகையில்தான் தனது வீட்டு மொட்டை மாடியில் ஒரு அழகிய தோட்டம் ஒன்றை அமைத்துள்ளார். அதில் ஏராளமான செடி, கொடிகளை நட்டு தினந்தோறும் பராமரித்து வருகிறார். இயற்கை மீது தீராத அன்பு கொண்ட ஆண்ட்ரியா, மற்றவர்களும் இதுபோன்ற பணிகளில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Tags:    

Similar News