சினிமா
லிப்ட் படத்தின் போஸ்டர்

கவினின் ‘லிப்ட்’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறதா? - படக்குழு விளக்கம்

Published On 2021-05-28 12:41 IST   |   Update On 2021-05-28 12:41:00 IST
கவினின் ‘லிப்ட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின் தற்போது நாயகனாக நடித்துள்ள படம் 'லிப்ட்'. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்குத் தயாராகி வந்த சமயத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


ரவீந்திரன் சந்திரசேகர்

இதனிடையே, இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தன. இந்நிலையில், 'லிப்ட்' படத்தின் வெளியீடு குறித்து லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். 

அவர் கூறியதாவது: “லிப்ட் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது. ஜூன் 20-ம் தேதிக்கு மேல் சூழ்நிலையைப் பார்த்துவிட்டு, தியேட்டரில் வெளியிடக் கூடிய சூழல் இல்லை என்றால் மட்டுமே ஓடிடியில் வெளியாகும். ஆனால், 'லிப்ட்' தியேட்டருக்கான படம் தான்” என்று ரவீந்திரன் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Similar News