சினிமா
விஜய் சேதுபதி, சூர்யா

சூர்யா, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘நவரசா’ வெப் தொடரின் ரிலீஸ் அப்டேட்

Published On 2021-05-28 06:27 GMT   |   Update On 2021-05-28 06:34 GMT
நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் நவரசா ஆந்தாலஜி வெப் தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்து வருகிறார். நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த வெப் தொடரை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், பொன்ராம், அரவிந்த்சாமி உள்பட 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். 

இதில் சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர், நித்யா மேனன், பார்வதி, அம்மு அபிராமி, பூர்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்விகா உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.


நவரசா வெப் தொடரை இயக்கிய இயக்குனர்களின் புகைப்படம்

இந்த தொடரின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆந்தாலஜி தொடர் வருகிற ஆகஸ்ட் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News