சினிமா
சம்யுக்தா ஹெக்டே

கொரோனா பாதிப்பு உறுதியானதும் மரண பயம் வந்தது - கோமாளி பட நடிகை

Published On 2021-05-28 09:15 IST   |   Update On 2021-05-28 16:31:00 IST
அந்தஸ்தும் ரசிகர்களும் இருந்தாலும் நோய் விஷயத்தில் உதவியற்றவர்களாகவே உணர்ந்ததாக கோமாளி பட நடிகை தெரிவித்துள்ளார்.
கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில், ஜி.வி.பிரகாசுடன் வாட்ச்மேன், ஜெயம் ரவியின் கோமாளி, வருணுடன் பப்பி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை  சம்யுக்தா ஹெக்டேவுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் சம்யுக்தா ஹெக்டேவின் பெற்றோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

சம்யுக்தா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு இப்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஆனாலும் சுவை, வாசனை உணர்வை இழந்துள்ளேன். சோர்வாக இருக்கிறது. என்னை உதவி அற்றவளாக உணர்கிறேன். நான் அதிகமாக நேசிப்பவர்களை இழந்து விடுவேனோ என்ற பயம் வந்தது. மரண பயம் கொடுமையானது. 


சம்யுக்தா ஹெக்டே

அம்மா, அப்பாவும் கொரோனா பாதிப்பில் இருந்தனர். எங்களுக்கு அந்தஸ்தும் ரசிகர்களும் இருந்தாலும் நோய் விஷயத்தில் உதவியற்றவர்களாகவே உணர்கிறோம். எனது அறையில் அடைபட்டு அழுதேன். என் அம்மாவை கட்டிப்பிடிக்க முடியவில்லை. நம்மில் பலர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது இல்லை. உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவு பழக்கம் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்’’ என்று கூறியுள்ளார்.

Similar News