சினிமா
மயில்சாமி

அது நானில்லை... போலியானவை... மயில்சாமி

Published On 2021-05-27 22:43 IST   |   Update On 2021-05-27 22:43:00 IST
பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் மயில்சாமி, என்னுடைய பெயரில் இருக்கும் கணக்குகள் போலியானவை என்று கூறியுள்ளார்.
யோகிபாபு, சிபிராஜ், நடிகை அதுல்யா ஆகியோரின் பெயரில் சமூக வலைத்தளங்களில்போலி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு, அதை பொதுவெளியில் சமீபத்தில் அவர்கள் தெரியப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் அதேபோன்று நடிகர் மயில்சாமியும் போலி கணக்கால் பாதிக்கப்பட்டுள்ளார். 



மயில்சாமி பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் சமீபகாலமாக தப்பான காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதையறிந்த நடிகர் மயில்சாமி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் எனக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை, என்னுடைய பெயரில் இருக்கும் கணக்குகள் போலியானவை. அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டேன். அதை யாரும் பின்தொடர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News