சினிமா
அட்லீ படத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஷாருக்கான்.... ஷூட்டிங் எப்போது தெரியுமா?
நடிகர் விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, அடுத்ததாக ஷாருக்கான் படத்தை இயக்க உள்ளார்.
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லீ.
இதையடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை அட்லீ இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. காரணம், திரைக்கதையில் சில திருத்தங்களை செய்யச் சொன்னாராம் ஷாருக்கான். அவர் விருப்பத்திற்கேற்ப திரைக்கதையை மாற்றி தற்போது ஓகே வாங்கிவிட்டாராம் அட்லீ.
‘பதான்’ படத்தில் நடித்து முடிந்த பின்னர், அட்லீ படத்தில் நடிக்க ஷாருக்கான் திட்டமிட்டுள்ளாராம். இந்தாண்டு இறுதியில் அட்லீ - ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.