சினிமா
பிரபாஸ், டாம் குரூஸ்

டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தில் பிரபாஸ் நடிக்கிறாரா? - ஹாலிவுட் இயக்குனர் விளக்கம்

Published On 2021-05-27 09:30 IST   |   Update On 2021-05-27 14:06:00 IST
நடிகர் பிரபாஸ், டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வந்தது.
ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்கள் பிரபாசுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகப் பெரிய அளவில் மார்க்கெட்டை ஏற்படுத்தி கொடுத்தன. தற்போது இந்திய அளவில் பிசியான நடிகராக வலம்வரும் பிரபாஸ், டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வந்தது.  

நடிகர் பிரபாஸ் ராதே ஷ்யாம் படப்பிடிப்பிற்காக இத்தாலி சென்றபோது, ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரே அவரை சந்தித்து கதை சொன்னதாகவும் சொல்லப்பட்டது.


இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரேவின் டுவிட்டர் பதிவு

இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரேயிடம் ரசிகர் ஒருவர் டுவிட்டர் வாயிலாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரே, “பிரபாஸ் மிக திறமையான மனிதர் தான். ஆனால் நாங்கள் இருவரும் ஒருபோதும் சந்தித்ததே இல்லை” எனக் கூறியுள்ளார். இதன்மூலம் பிரபாஸின் ஹாலிவுட் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Similar News