சினிமா
தமன்னா

நல்ல கதைக்களத்துக்கு மொழி ஒரு தடை இல்லை - தமன்னா

Published On 2021-05-26 16:29 GMT   |   Update On 2021-05-26 16:29 GMT
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, நவம்பர் ஸ்டோரி வெப் தொடரின் வெற்றி குறித்து பேட்டியளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் நடிப்பில் தற்போது நவம்பர் ஸ்டோரி என்னும் வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வி.ஐ.பி.யில் வெளியாகி உள்ளது. இந்தத் தொடர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள், இத்தொடரின் கதை மற்றும் இதில் நடித்தவர்கள் திறனை பாராட்டி வருகின்றனர். 
   
நவம்பர் ஸ்டோரியை மில்லியன் கணக்கான இந்தியர்கள் இந்தத் த்ரில்லர் வெளியான இந்த வார இறுதியில் பார்த்துள்ளனர். இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வி.ஐ.பி.யில் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. இந்த தொடரை ராம் சுப்பிரமணியன் இயக்கி இருக்கிறார். தமன்னாவுடன் இதில் பசுபதி, ஜி.எம்.குமார், அருள் தாஸ் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.



இந்த தொடரின் வெற்றி குறித்து தமன்னா கூறுகையில், “நவம்பர் ஸ்டோரி' பார்வையாளர்களிடமிருந்து பெற்றுத்தந்த பாராட்டு மற்றும் அன்பு மிகுந்த ஊக்கமளிக்கிறது. வெப் சீரிஸ்கள் நல்ல கன்டென்ட்டுடன் வழங்கப்படும்போது அதற்கு முழு அளவில் மக்கள் வரவேற்பை வழங்குவதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மில்லியன் கணக்கான மக்கள் இந்த வெப் சீரிஸை பார்த்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ளும்போது, நல்ல கதைக்களத்துக்கு மொழி ஒரு தடை இல்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது' என்றார். 
Tags:    

Similar News