சினிமா
கார்த்தி

கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன் - கார்த்தி

Update: 2021-05-26 14:42 GMT
தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்தி, கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ஒரு நல்ல படமாக அமைந்துவிட்டது.சமீபத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் மாஸ் காட்டுவதற்காக புகை பிடிக்கும் காட்சிகளை படங்களில் வைத்து வருகின்றனர். பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் வெறும் 20 படங்கள் மட்டுமே நடித்திருக்கும் கார்த்தி தன்னுடைய படங்களில் பெரும்பாலும் புகைபிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறார். இது குறித்து கூறிய கார்த்தி, கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைப்பிடிக்கும் படி நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News