சினிமா
அனுஷ்கா - காஜல் அகர்வால்

நன்றி சொன்ன காஜல் அகர்வால்... கோபப்பட்ட அனுஷ்கா ரசிகர்கள்

Update: 2021-05-24 16:25 GMT
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் அனுஷ்காவின் ரசிகர்கள், காஜல் அகர்வால் மீது கோபப்பட்டு வருகிறார்கள்.
காஜல் அகர்வாலும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவும் காதலித்து வந்தனர். காதலை வீட்டில் சொல்லி பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் மும்பையில் இருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாக நடந்தது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. காஜலின் திருமண புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் அனுஷ்கா. காஜலின் திருமணம் முடிந்த மறுநாள் வாழ்த்தியிருந்தார் அனுஷ்கா. அந்த ட்வீட்டுக்கு காஜல் 7 மாதங்கள் கழித்து இப்போது தான் பதில் அளித்திருக்கிறார். இதை பார்த்த அனுஷ்கா ரசிகர்கள் காஜல் மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News