சினிமா
ஷங்கர்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய இயக்குனர் ஷங்கர்

Update: 2021-05-15 11:50 GMT
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான படங்களை இயக்கிய இயக்குனர் ஷங்கர் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.அதைத்தொடர்ந்து நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கினார்கள். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 25 லட்சம் ரூபாயை முதலமைச்சரிடம் வழங்கினார். நடிகர் அஜித் ஆன்லைன் மூலம் ரூபாய் 25 லட்சம் கொடுத்தார். தற்போது இயக்குனர் ஷங்கர் ரூபாய் 10 லட்சம் வழங்கி இருக்கிறார்.
Tags:    

Similar News