சினிமா
மூடர் கூடம் நவீன் பிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
மூடர் கூடம் திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நவீனின் பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர் எனப் பல பொறுப்புகளை ஏற்று 'மூடர் கூடம்' படத்தை வெளியிட்டவர் நவீன். இந்தப் படத்துக்குக் கிடைத்த நல்ல வரவேற்புக்குப் பின் 'அலாவுதீனும் அற்புதக் கேமராவும்' என்கிற படத்தை நவீன் தயாரித்து, இயக்கி, நடித்தார்.
தொடர்ந்து விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் 'அக்னிச் சிறகுகள்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் நவீன் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
"இந்த ஈகைத் திருநாள் அன்று, இயக்குநர் நவீனுடன் இரண்டு படங்களில் இணைகிறோம் என்பதைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் அவர் இயக்கும் 'அக்னிச் சிறகுகள்' படத்துக்குப் பின் இது நடக்கும். நவீனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்" என்று ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.