சினிமா
தேன் படக்குழு

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘தேன்’ - நடிக்கப்போவது யார் தெரியுமா?

Published On 2021-05-14 12:25 IST   |   Update On 2021-05-14 12:25:00 IST
தமிழில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற தேன் திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாம்.
கணேஷ் விநாயகன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படம் தேன். இப்படத்தில் தருண் குமார் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலமாக பிரபலமான அபர்ணதி மலைவாழ் பெண்ணாக நடித்துள்ளார். தேன் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது. 



இந்நிலையில், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார்களாம். இதன் தெலுங்கு ரீமேக்கையும், கணேஷ் விநாயகன் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் கதாநாயகனாக ஆதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் மிருகம், அரவான், மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News