சினிமா
ஆர்யா, டெடி

‘டெடி’யாக நடித்தவரின் புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா

Published On 2021-03-18 12:32 IST   |   Update On 2021-03-18 12:32:00 IST
ஆர்யா, சாயிஷா நடிப்பில் கடந்த வாரம் ஓடிடியில் வெளியான டெடி படத்தை இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் இயக்கி உள்ளார்.
சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடிப்பில் கடந்த வாரம் ஓடிடியில் வெளியான படம் டெடி.  இப்படத்தில் இடம்பெறும் டெடி என்கிற பொம்மை கதாபாத்திரம் குழந்தைகள் ரசிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது. மேலும் வி.எப்.எக்ஸ் மூலம் அந்த டெடி கதாபாத்திரத்தை தத்ரூபமாக காட்டியதற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், படத்தில் டெடியாக நடித்தது யார் என்பதை நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். 



இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “டெடி பட காட்சிகளின் பின்னால் இருக்கும் மனிதர் இவர் தான், மிஸ்டர் கோகுல். மேடை நாடக நடிகரான இவர், பொம்மைக்குரிய ஆடையை அணிந்து அந்த டெடியின் உடல் மொழியை வெளிப்படுத்தினார். தலையை மட்டும் 3டி முறையில் உருவாக்கி, ‘பர்பாமன்ஸ் கேப்சர்’ எனும் டெக்னாலஜியை பயன்படுத்தி படமாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கோகுலுடன் எடுத்த புகைப்படத்தையும் ஆர்யா பதிவிட்டுள்ளார். 

Similar News