சினிமா
ஆனந்தியின் திருமண புகைப்படம்

நடிகை ஆனந்தியின் காதல் கைகூடியது எப்படி?

Published On 2021-01-08 14:27 IST   |   Update On 2021-01-08 14:27:00 IST
கயல், பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆனந்தியின் காதல் கைகூடியது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் கயல், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஆனந்தி. இவருக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இதில்அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜே எஸ் கே சதீஷ், இயக்குனர் நவீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றே கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது காதல் திருமணம் தானாம். ஆனந்தியின் கணவர் சாக்ரடீஸ் மூடர் கூடம் பட இயக்குனர் நவீனின் மைத்துனராம். 



நவீன் இயக்கியுள்ள அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் சாக்ரடீஸ் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தில் ஆனந்தி தான் ஹீரோயின். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது. 

பின்னர் இருவீட்டாரும் சம்மதித்ததை அடுத்து தற்போது அது திருமணத்தில் முடிந்துள்ளது. சாக்ரடீஸ் தற்போது நவீன் இயக்கும் அக்னி சிறகுகள் படத்திலும் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் ஒரு படத்தை இயக்கவும் உள்ளாராம். 

Similar News