நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, சிம்பு பேசியது தவறு என்று கூறியுள்ளார்.
சிம்பு பேசியது தவறு - கருணாஸ் ஆவேசம்
பதிவு: ஜனவரி 07, 2021 20:19
கருணாஸ் - சிம்பு
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தெய்வீக யாத்திரை என்ற பெயரில் சென்னை நந்தனம் தேவர் சிலை தொடங்கி பசும்பொன் வரை நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார் கருணாஸ். இதனால், திருவாடனை சட்டமன்ற உறுப்பினரான கருணாஸ் இன்று தமிழக காவல்துறை டிஜிபியை அலுவலகத்தில் சந்தித்து அனுமதி கோரி மனு அளித்தார்.
அதன்பின் பேசிய கருணாஸ், கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவோம். திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த அனுமதியை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் வீணாகபோய் விடக்கூடாது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி தந்தால் நல்லது.
கொரோனா வெல்வோம், கொல்வோம் என தொற்று வியாதியிடம் என்ன வசனங்கள் தேவை இருக்கிறது? சிம்பு அது போல் பேசியது தவறு. தொற்று நோயை வெல்வோம் கொல்வோம் என்றால் எப்படி? அவருக்கு கொரோனா வந்தா தெரியும். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
Related Tags :