வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை படத்தில் சின்னத்திரை பிரபலம் ஒருவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித் படத்தில் சின்னத்திரை பிரபலம்
பதிவு: ஜனவரி 06, 2021 21:48
அஜித்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹூமா குரேசி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் அஜித்துடன் நடிப்பவர்கள் பற்றிய விபரங்களை படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதனிடையே, தற்போது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் 'வலிமை' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புகழ், இதனை ஒரு வீடியோ பதிவில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பைத் தொடர்ந்து, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் செல்லத் திட்டமிட்டது படக்குழு. வெளிநாடுகளில் கொரோனா 2-வது அலை தீவிரமாகி வருவதால், வெளிநாட்டுப் படப்பிடிப்பே வேண்டாம் என்றும் உள்நாட்டிலேயே படமாக்கி விடலாம் 'வலிமை' படக்குழு முடிவு செய்துள்ளது.