பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா நடிப்பில் உருவாகி உள்ள காடன் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
மீண்டும் தள்ளிப்போகும் காடன்.... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
பதிவு: ஜனவரி 06, 2021 14:09
காடன் பட போஸ்டர்
கும்கி திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 'காடன்'. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இதில் ராணா, விஷ்ணு விஷால் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.நாயகியாக ஜோயா நடித்துள்ளார்.
3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும், ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி ஒலி அமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.
இப்படத்தை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போனது. பின்னர் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக கடந்த அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிட்டனர். தற்போது படத்தின் ரிலீசை மீண்டும் தள்ளிவைத்துள்ளனர். அதன்படி வருகிற மார்ச் 26-ந் தேதி இப்படம் தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :