சினிமா
பிக்பாஸ்

மீண்டும் சேர்ந்த பிக்பாஸ் 4 அன்பு கேங்... வைரலாகும் புகைப்படம்

Published On 2020-12-24 17:14 IST   |   Update On 2020-12-24 17:14:00 IST
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் அன்பு கேங் என்று அழைப்படுபவர்களின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றனர்.

ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். கடந்த வாரம் அர்ச்சனா குறைவான வாக்குகள் பெற்றதால் எலிமினேட் செய்யப்பட்டார்.



பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அர்ச்சனாவை அவரது குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்றனர். இந்நிலையில், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் அர்ச்சனாவை சந்தித்து இருக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பிக்பாஸ் ரசிகர்கள் இவர்களை அன்பு கேங் என்று அழைத்து வருகின்றனர்.

Similar News