சினிமா
டி.ராஜேந்தர்

தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் டி.ராஜேந்தர்

Published On 2020-12-24 16:37 IST   |   Update On 2020-12-24 16:37:00 IST
புதிய தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கிய டி.ராஜேந்தர் தற்போது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அதில் டி.ராஜேந்தர் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்ட நிலையில் அதன் தலைவராக டி.ராஜேந்தர் பொறுப்பேற்றார்.

ஏற்கனவே திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக டி.ராஜேந்தர் இருந்து வரும் நிலையில் அதன் விதிமுறைகளின்படி வேறு எந்த சங்கத்திலும் பதவி வகிக்க கூடாது. இதனால் தற்போது டி.ராஜேந்தர் புதிய தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனால் புதிய தயாரிப்பாளர் சங்க தலைவர் யார் என்பது குறித்து விரைவில் தெரிய வரும்.

Similar News