சினிமா
சிம்பு

சிம்புவின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு

Published On 2020-12-24 10:57 IST   |   Update On 2020-12-24 10:57:00 IST
ஓபிலி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள படத்தின் தலைப்பு மற்றும் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது, அதன்படி கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ள இப்படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என். கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளார்.



இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்துக்கு ‘பத்து தல’ என பெயரிட்டுள்ளனர். டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ராஜேஷ், விக்னேஷ் சிவன், கார்த்திக் சுப்புராஜ், பா இரஞ்சித், ஆனந்த் சங்கர், விஜய் மில்டன், சந்தோஷ் பி ஜெயக்குமார், சாம் ஆண்டன், அஸ்வத் ஆகியோர் வெளியிட்டனர். இப்படம் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான மப்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News