சினிமா
ஆரவ், நிலாமுதீன்

பிக்பாஸ் பிரபலம் ஆரவ்வின் தந்தை திடீர் மரணம்

Published On 2020-12-20 11:35 IST   |   Update On 2020-12-20 11:35:00 IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் ஆரவ், அவரின் தந்தை நிலாமுதீன் இன்று அதிகாலை காலமானார்.
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார்.  தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார். ஆரவ்வுக்கும், இளம் நடிகை ராஹிக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

இந்நிலையில், ஆரவ்வின் தந்தை நிலாமுதீன் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை, சொந்த ஊரான நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆரவ்வின் தந்தை கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News