சிரஞ்சீவி சர்ஜா இறப்பதற்கு முன் தன்னிடம் கடைசியாக என்ன சொன்னார் என்பதை நடிகை மேக்னா ராஜ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
இறப்பதற்கு முன் சிரு என்னிடம் கடைசியாக சொன்ன வார்த்தை - மேக்னா ராஜ் உருக்கம்
பதிவு: டிசம்பர் 08, 2020 07:40
சிரஞ்சீவி சர்ஜா, மேக்னா ராஜ்
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். அவரின் திடீர் மரணம் குடும்பத்தினரை மட்டுமல்லாது, திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் சிரஞ்சீவி சர்ஜா இறந்த தினமான ஜூன் 7ம் தேதி என்ன நடந்தது என்று அவரது மனைவி மேக்னா ராஜ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: வழக்கமான ஞாயிற்றுக்கிழமைகளை போன்று, அந்த நாளும் சாதாரணமாகத் தான் தொடங்கியது. சிருவின் சகோதரர் துருவா, அவரின் மனைவி மற்றும் நான் வீட்டிற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது சிரு திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக என் மாமனார் எங்களை அழைத்தார்.
நாங்கள் சென்று பார்த்தபோது சிரு சுயநினைவில்லாமல் இருந்தார். நாங்கள் அவரை அப்படி பார்த்ததே இல்லை. அதன் பிறகு லேசாக நினைவு திரும்பியது. நாங்களே அவரை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவமனையை அடைந்ததும், மருத்துவர்கள் சிருவை எமர்ஜென்சி அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அதன் பிறகு சிருவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொன்னார்கள். எல்லாம் வேகமாக நடந்து முடிந்துவிட்டது. சிரு என்னிடம் கடைசியாக சொன்னதை மறக்கவே முடியாது. வீட்டில் அவருக்கு லேசாக நினைவு திரும்பியபோது என்னைப் பார்த்து, நீ டென்ஷன் ஆகாத, எனக்கு ஒன்னும் ஆகாது என்பது தான் சிரு என்னிடம் கடைசியாக பேசியது என்று கூறினார்.
Related Tags :