நடிகை ஜெயசித்ராவின் கணவரும் இசை அமைப்பாளர் அம்ரிஷ் தந்தையுமான கணேஷ் இன்று காலமானார்.
நடிகை ஜெயசித்ரா, இசையமைப்பாளர் அம்ரிஷ் வீட்டில் நடந்த சோகம்... திரையுலகினர் அஞ்சலி
பதிவு: டிசம்பர் 04, 2020 18:20
நடிகை ஜெயசித்ரா - இசையமைப்பாளர் அம்ரிஷ்
நடிகர்கள் சிவாஜி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட பலருடன் நடித்தவர் நடிகை ஜெயசித்ரா. தமிழ் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு படங்களிலும் மலையாளம் கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் என்பவர் இன்று திருச்சியில் இன்று காலமானார். ஜெயசித்ராவின் கணவரின் மறைவை அடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கும்பகோணத்தில் பிறந்த அவர் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஜெயசித்ரா கடந்த 1983-ம் ஆண்டு கணேஷை திருமணம் செய்து கொண்டார். ஜெயசித்ரா-கணேஷ் தம்பதிக்கு அம்ரிஷ் என்ற மகன் உள்ளார். இவர் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :