சினிமா
ஸ்ரீதிவ்யா

ரீ என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீதிவ்யா - இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார்

Published On 2020-12-04 13:52 IST   |   Update On 2020-12-05 11:07:00 IST
கடந்த மூன்று ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை ஸ்ரீதிவ்யா, அடுத்ததாக இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்  பெற்றது. இதையடுத்து காக்கிசட்டை, காஷ்மோரா, ஜீவா, ஈட்டி, மருது என அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வந்த அவர், கடைசியாக 2017ம் ஆண்டு வெளியான ‛சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படத்தில் நடித்தார். 

அதன் பின்னர் 3 வருடங்களாக அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் பாணா காத்தாடி பட இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  



இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்க உள்ளார். இதில் ஸ்ரீதிவ்யா பிசியோதெரபி மருத்துவராக  நடிக்க உள்ளதாகவும் அவரது கதாபாத்திரத்தை சுற்றித்தான் கதை பின்னப்பட்டு இருப்பதாகவும் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.    

இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் இது ஒரு அதிரடி ஆக்ஷன் கதை என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News