கடல், தேவராட்டம் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் கவுதம் கார்த்திக்கை வழிமறித்து செல்போன் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
கவுதம் கார்த்திக்கிடம் செல்போன் கொள்ளையடித்த மர்ம நபர்
பதிவு: டிசம்பர் 03, 2020 11:29
கவுதம் கார்த்திக்
நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். இவர், கடல், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் குடும்பத்துடன் போயஸ் தோட்டத்தில் வசித்து வருகிறார்.
இவர் தினமும் அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிள் மூலம் சைக்கிளிங் பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்ட கவுதம் கார்த்திக், அதிகாலை மெரினா வழியாக கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிளிங் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். ராதாகிருஷ்ணன் சாலை - டி.டி.கே சாலை சந்திப்பில் தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது அவரை வழிமறித்த செல்போன் திருடர்கள் அவரிடம் வழிபறி செய்ய மிரட்டியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற நடிகர் கவுதம் கார்த்திக்கை கீழே தள்ளி விலையுர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இதையடுத்து தகவலறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர். செல்போன் திருடர்களை பிடிக்க மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Related Tags :