பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் திருமணமானதை மறைத்து 4 பேருடன் தொடர்பில் இருந்ததாக அவரது கணவர் புகார் தெரிவித்துள்ளார்.
திருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்
பதிவு: டிசம்பர் 02, 2020 13:24
பவித்ரா புனியா, சுமித்
இந்தியில் ஏ ஹை மொஹப்பதைன், நாகின் 3 உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பவித்ரா புனியா. சில இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த அவர் இரு தினங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார்.
பவித்ரா புனியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களிடம் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்றும் தெரிவித்தார். ஆனால் வருங்கால கணவர் பெயரை சொல்லவில்லை.
இந்த நிலையில் சுமித் என்பவர், தன்னை திருமணம் செய்து பவித்ரா புனியா மோசடி செய்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இவர் ஓட்டல் உரிமையாளராக இருக்கிறார்.
அவர் கூறும்போது, “எனக்கும், பவித்ரா புனியாவுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அவர் பெயரை நான் பச்சை குத்திக்கொண்டேன். திருமணத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று தெரிவித்து இருந்தார். திருமணத்தை மறைத்து 4 பேருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
ஒரு ஓட்டலில் இன்னொரு நடிகருடன் அவர் இருப்பதை பார்த்தேன். அவரது நடவடிக்கைகளை பல தடவை மன்னித்தேன். இனிமேல் மன்னிக்க முடியாது. பவித்ரா என்னை விவாகரத்து செய்து விட்டு அவரது விருப்பம்போல் வாழலாம்” என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :