நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தை சிவகுமார், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு கொரோனாவா? - தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்
பதிவு: நவம்பர் 30, 2020 13:11
சிவகுமார்
நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தன்னை சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் ஒரு வாரமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிகிறது.
அவர் நலமுடன் உள்ளதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுகுறித்து எந்தவித தகவலையும் அவரது குடும்பத்தினர் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :